×

கனரக வாகனங்களால் குண்டும், குழியுமான குமாரம் சாலை

அலங்காநல்லூர்: கனரக வாகனங்களால் குமாரம்-நகரி சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலைக்கு செல்ல அலங்காநல்லூர் பாலமேடு பிரதான சாலையில் இருந்து குமாரம் வழியாக நகரிக்கு கடந்த ஆண்டு ரூ.8 கோடியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக மதுரை நகரில் நடைபெறும் மேம்பால பணிக்கு தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் ஜல்லி, மணல், எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி செல்கின்றன.

அளவுக்கு அதிகமான லோடு ஏற்றி கொண்டு அதி வேகத்தில் செல்வதால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது. நான்கு வழிச்சாலை வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அளவுக்கு அதிகமான பாரத்துடன் கிராமப்புற இணைப்பு சாலை வழியாக சென்று வருவதால் பல இடங்களில் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது. அதி வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது.

இதுகுறித்து 10வது வார்டு மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவி முருகன் கூறுகையில், ‘குமாரம்-நகரி இணைப்பு சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சேதமடைந்த இடங்களில் சாலையை சீரமைத்து, இணைப்பு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : road ,Kumaram Road , Heavy vehicles, bomb, pit, Kumaram road
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...