×

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் : பாஜகவின் அண்ணாமலை, எச். ராஜா, குஷ்பூ, நாம் தமிழர் சீமான், தேமுதிக பிரேமலதா பின்னடைவு!!

சென்னை : தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. *அரவக்குறிச்சியில் போட்டியிடும் அண்ணாமலை பின்னடைவில் இருக்கிறார். அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை வகிக்கிறார். *தாராபுரத்தில் போட்டியிடும் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார். *காரைக்குடியில் மண்ணின் மைந்தன் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகள் பெற்றுள்ளார். ஹெச்.ராஜா 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.*ஆயிரம் விளக்கில் களமிறங்கிய குஷ்பு திமுக வேட்பாளர் எழிலனை விட பின்னடைவில் இருக்கிறார்.எழிலன் 3330 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், குஷ்பு 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.*திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலயில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீமான் பின்னடைவு.*சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.*விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு…

The post தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் : பாஜகவின் அண்ணாமலை, எச். ராஜா, குஷ்பூ, நாம் தமிழர் சீமான், தேமுதிக பிரேமலதா பின்னடைவு!! appeared first on Dinakaran.

Tags : Legislation Election ,Tamil Nadu ,Anamalai ,Bajaga ,H.P. king ,kushpoo ,chennai ,Bajaka ,H. Raja ,We Tamil Seeman ,Demutika ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...