×

வெளிப்படையான வரி விதிப்புக்கு வரவேற்பு: மலபார் குழும தலைவர் அகமது பேட்டி

சென்னை: மத்திய அரசு அண்மையில் வரி விதிப்பு வெளிப்படையாக இருக்கும் - நேர்மையாளர்களை கவரவிப்போம்’ என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது  கூறியதாவது, “வரி விதிப்பு, வரிச் செலுத்துவது ஆகியவற்றை மேலும், வௌிப்படையாக ஆக்கும் என்பதோடு நேர்மையாக வரி செலுத்துவோருக்கு இந்த திட்டத்தால் நன்மைகளும் கிடைக்கும். பிரதமர் புதிதாக அறிவித்துள்ள வரி அமைப்பை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். சீரான முறையில் வரி செலுத்தும் மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இது மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.

வரிக்கட்டமைப்பை எளிமைப்படுத்துவதன் மூலம் மத்திய அரசின் வருவாய் பெருகும். வரி வசூல் அதிகமாவது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கும். வரி ஏய்ப்போர், கள்ளச் சந்தைகாரர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். புதிய வரித் திட்டம் இந்த திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடி. அரசின் வரி வசூலை பெருக்குவதில் இது பெரும்பங்காற்றும்.

வரி ஏய்ப்புக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான தேவை உணரப்பட்டு வருகிறது. குறித்த ேநரத்தில் வரி செலுத்திவிடுவதின் முக்கியத்துவத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
வரியை சரியாகவும் குறித்த நேரத்திலும் கட்டுவதன் மூலம் ஒவ்வொருவரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு பெறலாம்” என்றார்.


Tags : Malabar Group ,Ahmed , Taxation, Malabar Group Chairman Ahmed
× RELATED புதுச்சேரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு