×

பெய்ஜிங்கில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு தளர்வு: கொரோனா தொற்று குறைந்ததால் நடவடிக்கை!

பெய்ஜிங்: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் தோன்றியது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து,  ஹூபெய் மகாணத்தை முழுமையாக முடக்கிய சீனா, தொற்று பரவலை சில மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தது. எனினும், வெளிநாடுகளில் இருந்து  தாயகம் திரும்புபவர்களால் மீண்டும் உள்ளூரில் தொற்று ஏற்படுவதாக சீனா கூறி வந்தது.

இதனால், சீனாவில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த இருவாரங்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக தொற்று  பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.  இதையடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றனர். அதன் ஒருபடியாக, வெளியிடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது முகக்கவசம் அணிதல் கட்டாயம் இல்லை என்று பெய்ஜிங் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2வது முறையாக மாஸ்க் அணிவதில் இருந்து கட்டுப்பாடுகளை  சீனா தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Beijing , Beijing, Moscow, Corona, China
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...