×

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்களை தொடங்க முடிவு

டெல்லி: ரஷ்யப் பல்கலைக்கழங்களில் நடப்புக் கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேரவிருக்கும் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு, இணைய வழியில் பாடங்களைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர் / அக்டோபரில் தொடங்கி, நடப்புக் கல்வியாண்டு முழுவதும் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமானப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

ரஷ்ய பல்கலைக்கழகங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சமூக நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (OBC) மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எனில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ரஷ்ய பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையின் முதல்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்திய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வி பயில விரும்பினால், அதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது தற்போது கட்டாயமாகும். ஆனாலும், ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் தற்போது நடைபெறும் மாணவ சேர்க்கையின்போதே அதற்கான சான்றிதழைத் தர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அதாவது செப்டம்பர் மாத இறுதியில் தர வேண்டும்.



Tags : universities ,Indian ,Russian ,Russia , Medicine, Online, Russia
× RELATED அர்ஜெண்டினாவில்...