×

உள்நாட்டு, சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டம்?... செப்.1 முதல் அமலுக்கு வரும் என தகவல்

டெல்லி: செப். 1-ம் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளிடமிருந்து ஏ.எஸ்.எஃப் தற்போது ரூ .150 ல் இருந்து ரூ .160 ஆக உயர்த்தப்படும், சர்வதேச விமானப் பயணிகளுக்கு இது தற்போது 4.85  டாலரில் இருந்து 5.2 டாலராக உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. ஏ.எஸ்.எஃப் கட்டணம் விமான நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு பின்னர் அது அரசுக்கு வழங்கப்படுகிறது. ஏ.எஸ்.எஃப் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக இது 2019 ஜூலையில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல மாத பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானத் தொழில் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் நேரத்தில் இந்த கட்டண உயர்வு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2020 -ம் ஆண்டில் விமானப் பயணிகளின் வருவாய் 55 சதவீதம் அல்லது 314 பில்லியன் டாலர் குறையும் என்று உலகளாவிய விமான போக்குவரத்து அமைப்பு, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) கணித்துள்ளது. இந்தியாவில், கிட்டத்தட்ட அனைத்து விமான நிறுவனங்களும் வேலைகளை குறைத்தல், ஊழியர்களை விடுப்பில் அனுப்புவது போன்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதற்கிடையில், அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, மொத்த மாத சம்பளம் ரூ .25,000 க்கும் அதிகமாக சம்பாதிக்கும் ஊழியர்களின்  சம்பளத்தை 50 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனம் மற்ற விமான நிறுவனங்களைப் போலவே பணியாளர்களை பணிநீக்கம் செய்யாது என்று கூறியுள்ளது.

Tags : Ministry of Civil Aviation ,passengers ,Ministry of Domestic and International Passenger , Ministry of Domestic and International Passenger and Civil Aviation
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!