×

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்..என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி: தோனி ட்வீட்

புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்திருந்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தோனிக்கு வாழ்த்து தெரிவித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு புகழாரத்தை சூட்டியுள்ளார். அந்த வகையில், நீங்கள் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டிருக்கிறீர்கள் என்று தோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சிறந்த தலைமை பண்பு, விக்கெட் கீப்பிங் திறமைக்காக வரலாற்றில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்றும் கடந்த ஆண்டுகளில் இந்திய அணிக்காக தோனி விளையாடியது மிகவும் பெருமைமிக்கது.

தொடர்ந்து, 130 கோடி இந்தியர்கள் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் வீரர் தோனி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் அனுப்பிய வாழ்த்து மடலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தோனி கலைஞன், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் போன்றவர்கள் எப்போதுமே விரும்புவது அவர்களது கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் மக்கள் எல்லோரிடமிருந்தும் கிடைக்கின்ற பாராட்டுகளை தான்.என்னை வாழ்த்தியமைக்கும், பாராட்டியமைக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி, எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Veteran ,Modi ,Athlete ,Army ,Artist , Dhoni, Prime Minister Modi, thank you
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...