×

நெல்லையில் முதல் முறையாக ஆணி வெடிகுண்டு : காவலர் கொல்லப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்

நெல்லை:  ஸ்ரீவைகுண்டம் அருகே காவலரை கொல்ல பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டு ஆணிகளால் தயாரிக்கப்பட்டிருப்பது மற்ற காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஓய்ந்திருப்பதாக நினைத்திருந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் ஆணி வெடிகுண்டை எங்கே தயாரித்தது?  என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டு வரை நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் உச்சத்தில் இருந்தது. இதனையடுத்து பெரும்பாலான சாதி கலவரங்களில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு வைத்தன.

மேலும் மோதலில் எதிரிகளை அச்சுறுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்ட வெடிகுண்டுகள், நாளடைவில் உயிரை பலிவாங்கவும் உருவாக்கப்பட்டது. இந்த வெடி குண்டில், கூர்மையான சீனி கற்களை பொடிசெய்தும், குண்டூசிகளை கொண்டும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. சிவகாசியிலிருந்து வெடிமருந்துகளை வாங்கி வந்து பல கிராமங்களில் குடிசை தொழிலாக நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டுகளை தயாரித்து வந்தனர். மேலும் இவற்றை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்தும் வந்தனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஓய்ந்திருந்த வெடிகுண்டு கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

அதிலும் முதல் முறையாக ஆணிகளால் ஆன வெடிகுண்டுகள் தாயரிக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு வீசிய துரைமுத்துவின் உடலிலும் ஆணிகள் பாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் அதுவும் முதல் முறையாக ஆணிகள் வைத்து தயாரிக்கப்பட்டது எப்படி? , மேலும் ஆணி வெடிகுண்டு எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டது?  என்பது குறித்த விசாரணையை காவல் துறை தற்போது தீவிரப்படுத்திருக்கிறது.

Tags : murder ,time ,Nellai ,policeman , Nail bomb for the first time in Nellai: startling information in the case of the murder of a policeman
× RELATED 2வது முறையாக அபார வெற்றி: ராகுல் காந்தி...