×

தேசிய கொடியேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது : பட்டியலின ஊராட்சித் தலைவர் அமிர்தம் கருத்து!!

திருவள்ளூர்: சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சித் தலைவர் அமிர்தம் இன்று தேசியக் கொடியேற்றினார்.தேசிய கொடியேற்றிய ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர்கொத்து கொடுத்து மரியாதை செய்தார். மேலும் பஞ்சாயத்து தலைவர் அமிர்தத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற செயலாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய பஞ்சாயத்து தலைவர் அமிர்தம், தேசிய கொடியேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


Tags : Amritham ,Panchayat , National flag hoisting is pleasing: Panchayat leader Amritham comments on the list !!
× RELATED முன்னாள் உதவி ஆணையரை தாக்கிய தந்தை, மகன் கைது