×

10-ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறும்: தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவிப்பு..!!

சென்னை: 10ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதேபோல் 12ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டிருக்கிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தனித்தேர்வுகளாக எழுத விண்ணப்பம் செய்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேலான தனி தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு எப்போது நடைபெறும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு குறித்த தகவலை தற்போது தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி 10ம் வகுப்பு தனித்தேர்வுகளுக்கான தேர்வும், 10ம் வகுப்பு துணை தேர்வும் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது  செப்டம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10ம் வகுப்பு தனித்தேர்வுகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோக கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மதிப்பெண்களின் குறை இருக்கக்கூடிய மாணவர்கள் செப்டம்பர் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறக்கூடிய 10ம் வகுப்பு துணை தேர்வை எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறலாம் என்ற அறிவிப்பையும் தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டிருக்கிறது.

அதுபோக 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் என்றும் 12ம் வகுப்பு துணை தேர்வானது செப்டம்பர் 21 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை போல 11ம் வகுப்பு துணை தேர்வானது செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7 ம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கான துணை தேர்வு பற்றிய ஒரு அறிவிப்பையும், பல்வேறு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையையும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டிருக்கிறது. இதற்காக  விண்ணப்பிக்கக்கூடிய நாட்கள் பற்றிய ஒரு விரிவான அறிவிப்பையும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Tags : bye-election ,announcement ,Tamil Nadu Directorate of Examinations ,Directorate ,Examinations Announcement ,Tamil Nadu , 10th Class, Sub-Examination, Directorate of Tamil Nadu Examinations
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு