×

ஆன்லைன் மருந்து விற்பனை 'நெட்மெட்ஸ்'நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை ரூ.620 கோடிக்கு வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்...!!!

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸ் நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை ரூ.620 கோடிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கரையம் செய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மருந்து வணிகத்தை, சில தினங்களுக்கு முன் அமேசான் நிறுவனம் துவங்கிய நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் மருந்து விற்பனை சந்தையை தொடங்க தயாராகி வருகிறது. மேலும், நெட்மெட்ஸ் குழுமத்தில் முக்கிய பங்குதாரரான விட்டலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நெட்மெட்ஸ் நிறுவனத்தின் நேரடி உரிமையாளராக ரிலையன்ஸ் மாறியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட நெட்மெட்ஸ், உரிமம் பெற்ற இ-பார்மசி போர்ட்டல் போன்ற நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கு, இந்தியாவில் உள்ள மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வினியோகித்து வருகிறது.

கொரோனா நெருக்கடி காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தேவை அதிகரித்துள்ளதால், அமேசான், வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட், ரிலையன்சின் ஆன்லைன் மளிகை சேவை, ஜியோ மார்ட் உள்பட பல்வேறு நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு, இன்னமும் இறுதி செய்யவில்லை. இந்நிலையில், ஆன்லைனில் மருந்துகளை விற்பது, மருந்துகளை சரிபார்க்காமல் விற்பனை செய்ய வழிவகுக்கும் என, மருந்தக உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : drug retailer ,Reliance Industries , Reliance Industries buys 60 per cent stake in online drug retailer 'NetMets' for Rs 620 crore
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...