×

பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: கும்மிடிப்பூண்டியில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை கொடியேற்ற விடமால் தடுத்த நிகழ்வுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார். இவரை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடக்கப்பள்ளியில் கொடியேற்ற தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் சென்ற அவரை கொடியை ஏற்ற விடாமல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்ட பஞ்சாயத்து அலுவல அதிகாரிகள் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதேபோல, குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக புகார் எழுந்தது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமிர்தம் தடுக்கப்பட்டதாக வந்த செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர், 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஹரிதாஸ், ஊராட்சி அலுவலக செயலாளர் சசிகுமார் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம், என கூறியுள்ளார். குறிப்பிடத்தக்கது.


Tags : Amritham ,Kamal Haasan ,sovereignty ,Indian ,PML-N , Panchayat Leader, Amritham, M.N.M., Kamalhasan
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...