×

அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: மூச்சுத்திணறல் பாதிப்புக்கு சிகிச்சை

புதுடெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்த சில நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதால் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 14ம் தேதி மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இல்லை என வந்தது. இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதாகவும் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அமித் ஷாவிற்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்தபடியே பணியை தொடருவார் என்றும் எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : hospital ,Amit Shah ,suffocation , Amit Shah, hospital admission, respiratory problems, treatment
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...