×

‘கல்லிலே இசை வண்ணம் கண்டார்’ நாதஸ்வரம், வாள் சிற்பங்கள் செதுக்கி மாணவர் அசத்தல்

திருப்பரங்குன்றம்:   பிளஸ் 1 படிக்கும் மாணவர் சிற்பியாக மாறி கல்லில் நாதஸ்வரம், வாள் உள்ளிட்ட அழகிய கற்சிற்பங்களை உருவாக்கி வருகிறார். மதுரை மாவட்டம், திருநகரை சேர்ந்தவர் ஸ்தபதி பாலமுருகன். இவர் விளாச்சேரியில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவருடைய 2வது மகன் கார்த்திக்ராஜா(16). பிளஸ் 1 மாணவர்.  கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால், சிற்ப கலைக்கூடத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளார். சிற்பம் செதுக்குவதிலிருந்த ஆர்வத்தால் கற்களாலான நாதஸ்வரம், வாள், மணி, குத்துவிளக்கு போன்றவற்றை சிற்பமாக செதுக்கியுள்ளார்.

இவர் செதுக்கிய நாதஸ்வரம் 1.50 அடி நீளமும், 1.50 கிலோ எடையும் கொண்டது. ஒரே கல்லில் நாதஸ்வரத்தை வடிவமைத்துள்ளார். இந்த நாதஸ்வரத்தை கொண்டு இசைக்கலைஞர்கள் வாசிக்கும்போது, மரத்திலான நாதஸ்வரத்தில் வரும் சுதி 75 சதவீதத்திற்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் கற்களாலான நாதஸ்வரம் கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய கோயில்களில் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு பல்வேறு தரப்பினரை பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவனின் இந்த முயற்சி பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.

Tags : student carving sword sculptures ,Stone , ‘Music found ,stone,Nataswaram, , sword,
× RELATED மிசோரமில் கனமழையால் நிலச்சரிவு 22 பேர்...