×

8 வழிச்சாலை திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு: மொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்

தருமபுரி: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே சாமியாபுரத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அளிக்கும் இந்த திட்டத்தை மத்திய மாநில, அரசுகள் கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கநல்லூர் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அந்த பகுதி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். நீர்நிலைகள், கிணறு, குளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை அளித்து 8 வழிச்சாலை அமைக்க வேண்டுமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதாக அந்த பகுதியினர் கூறினர். மொட்டை அடித்து விவசாயிகள் நூதன முறையின் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல கிராமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அழியும் என்று அவர்கள் எச்சரித்தனர்.


Tags : opposition ,peasants , 8 Route Project, Opposition, Peasants, Innovation Struggle
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...