×

ஈரோட்டில் வாகன சோதனையை தளர்த்திய போலீசார்...!! இ-பாஸ் இன்றி மாவட்ட எல்லையை கடக்கும் வாகனங்கள்...!!

ஈரோடு: விண்ணப்பித்த அனைவருக்கும் இ - பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்ட எல்லையில் போலீசார் வாகன சோதனையை தளர்த்தியுள்ளனர். இ-பாஸ் இன்றி போலீசார் வாகனங்களை அனுமதித்திருப்பது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விதிக்கப்பட்டிருந்த இ-பாஸ் கட்டுப்பாடுகள் தற்போது தமிழக அரசால் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து விண்ணப்பம் செய்யக்கூடிய அனைவருக்குமே இ-பாஸ் என்பது எளிய முறையில் கிடைத்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக சிரமப்பட்டு வந்த வாகன ஓட்டிகள் தற்போது  தளர்த்தப்பட்டுள்ள வாகன சோதனையால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசல் தவிர்க்கப்பட்டு, விரைவாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், இ-பாஸ் இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்தால் ஈரோடு மாவட்டத்திற்குள் வந்து செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஈரோடு-நாமக்கல் எல்லையான கருங்கல் பாளையம் சோதனை சாவடியில் இந்த தளர்வானது அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்காக இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் தினந்தோறும் வந்து செல்லும் தொழிலாளர்கள் இ-பாஸ் முறையை விண்ணப்பிப்பது என்பது சத்தியாகூறாக அமையாத நிலையில், தற்போது போலீசார் இதுபோன்ற தளர்வுகளை ஏற்படுத்தியிருப்பது தொழிலாளர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Erode, Vehicle Testing, E-Pass, District Boundary
× RELATED 22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு