×

ராஜஸ்தானில் பி.எஸ்பி. எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைந்ததை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: ராஜஸ்தானில் பி.எஸ்பி. எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைந்ததை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனை பயன்படுத்திக்கொண்டு ராஜஸ்தானில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்துவிட பா.ஜ.க முயற்சி செய்தது. கடைசியில் அதை காங்கிரஸ் போராடி வீழ்த்தியது. அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார்.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தில் பெரும்பான்மையை அசோக் கெலாட் நிரூபித்தார். இதற்கிடையில்,  ராஜஸ்தானில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் பா.ஜ.க. இணைந்ததை பிரச்சினையாக்கியது. அவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸில் இணைந்ததை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து பா.ஜ.க எம்.எல்.ஏ மதன் தில்வார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டப்பேரவை கூட்டப்பட இருந்த நிலையில் சபாநாயகரின் முடிவு தொடர்பாக அவசர முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்றைய விசாரணையின் போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இணைந்தது தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : BSP ,BSP MLAs ,Rajasthan Supreme Court ,Congress SC ,Speaker ,Rajasthan , Rajasthan, BSP , MLAs, Congress, BJP, Supreme Court
× RELATED விவசாயிகளை பாதிக்கும் 3 மசோதாக்களை...