×

சபரிமலை நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்:ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி  மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் ேததி) மாலை 5  மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறக்கிறார்.  தொடர்ந்து அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பை தந்திரி கண்டரர் ராஜீவரர் ஏற்கிறார். இன்று  வேறு பூஜைகள் எதுவும் நடக்காது.  17ம் தேதி (தமிழ் ஆவணி, மலையாள சிங்ஙம் 1ம் தேதி )  காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, அபிஷேகம், மண்டபத்தில் கணபதி ஹோமம்  நடக்கிறது. தொடர்ந்து வரும் 21ம் தேதி வரை பூஜைகள் நடக்கின்றன.Tags : Sabarimala Walk , Sabarimala
× RELATED மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை 15ம்...