×

புனே மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் மேலும் 50,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: சுகாதாரத்துறை தகவல்..!!

புனே: புனே மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் மேலும் 50,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத்துறை கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து புனே மண்டல கமிஷனர் சவுரப் ராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: புனே மாவட்டத்தில் இதுவரை 1.10 லட்சத்துக்கு மேற்பட்டோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 82,000 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 2.30 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் கூறியதாவது: இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு 1.60 லட்சத்தை  தாண்டும் என்று சுகாதாரத்துறையினரால் கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த காலக்கட்டத்துக்குள் மேலும் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், புனே கோப் என்ஜினீயரிங் கல்லூரியில் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் வருகிற 20ம் தேதி நிறைவு பெறும். இதே போல மற்றொரு சிகிச்சை மையம் பிம்ரி சிஞ்ச்வாட்டில் அமைய உள்ளது என்ற முக்கிய தகவல்களை தெரிவித்தார்..!

Tags : district ,Health Department ,Pune , corona ,Pune district ,Health Department information ,
× RELATED தமிழகத்தில் பறவை காய்ச்சல் வதந்திகளை...