×

எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா அரசு கடும் எச்சரிக்கை !

பியாங்யாங்: அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா வட கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.இதுதொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது….

The post எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா அரசு கடும் எச்சரிக்கை ! appeared first on Dinakaran.

Tags : North Korean government ,US President Joe Biden ,Pyongyang ,America ,North Korea ,Dinakaran ,
× RELATED பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம்...