×

ஏழ்மையிலும் விடாப்படியாக சாதிக்க துடித்தவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த இளம்பெண் உயிர், உபி.யில் பறிப்பு: பைக்கில் விரட்டிய ரோமியோக்களால் பரிதாபம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷார் பகுதியைச் சார்ந்தவர் சுதிக்‌ஷா பட்டி (19). மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இருந்தாலும், கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம், உடையவர். இதனால், மேற்படிப்புக்காக அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் அங்கு சென்று படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினார். கடந்த திங்களன்று தனது மாமா வீட்டுக்கு சென்று விட்டு, மாலையில் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரை விரட்டினர். அவரை கிண்டல் செய்தனர்.

இதனால், சுதிக்‌ஷா பீதி அடைந்தார். சுதிக்‌ஷாவைஅவர்கள் முந்திச் சென்று அச்சுறுத்தினர். இதனால் நிலைதடுமாறிய சுதிக்‌ஷா கீழே விழுந்து பலத்த காயத்துடன் அங்கேயே பலியாகினார். வரும் 20ம் தேதி அமெரிக்காவுக்கு திரும்ப இருந்த அவர், ஈவ்டீசிங் ரோமியோக்களால் பரிதாபமாக இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதிக்‌ஷாவின் தந்தை சாலையோரத்தில் சிறிய உணவுக்கடை நடத்தி வருகிறார். அம்மா இல்லத்தரசி. மிகவும் ஏழ்மைகள். இவர்களுக்கு 6 பிள்ளைகள். மூத்தவர் சுதிக்‌ஷா. ஏழ்மை காரணமாக சுதிக்‌ஷாவை பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வைக்க முடியவில்லை. ஆனாலும், தனது திறமையால் உதவித்தொகை பெற்று, அமெரிக்கா சென்றார். அவரை இழந்த சோகத்தில் குடும்பத்தினர் கதறுகன்றனர். சுதிக்‌ஷாவைின் மரணம், உத்தர பிரதேசத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் இப்போது பிரச்னையாகி இருக்கிறது. அவருடைய சாவுக்கு காரணமானவர்களை கைது செய்து, தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Tags : teenager ,Romeos ,United States ,UP , Educated girl in the United States, who was eager to achieve perseverance in poverty, flush in UP: Romeos chased by bike
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்