×

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு செல்ல மறுப்பு: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் ஊராட்சி பாரதி நகரில் 6 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. நேற்று அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல சுகாதாரத்துறையினர் வந்தனர். அப்போது, தொற்று பாதித்த 6 பேரில் 2 பேர் மட்டும் சுகாதார துறையினர் கொண்டு வந்த வாகனத்தில் ஏறினர். மீதமிருந்த 4 பேர் அதிகாரிகளின் வாகனத்தில் ஏற மறுத்து, “எங்களுக்கு மறுத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லை. நாங்கள் வீட்டிலேயே தங்கி கொள்கிறோம்” என திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர் ஆகியோர் அங்கு விரைந்து வந்து சிகிச்சைக்கு செல்ல மறுத்த 4 பேரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த 4 பேரும் வீட்டில் இருந்து சிகிச்சை பெற போதிய வசதி இல்லை என்றும், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பாதிக்கும் ஆபத்து உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் எச்சரித்தார். தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த 4 பேரும் சிகிச்சைக்கு வர ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, வேறு வாகனத்தில் சிகிச்சைக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : victims ,Corona ,Gummidipoondi ,cikiccaikku cella maṟuppu ,Kum'miṭippūṇṭi arukē paraparappu , Corona victims, treatment, refusal to go, Gummidipoondi
× RELATED அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி