ஐதராபாத்துக்கு 2ம் முறையாக லாரிகளில் 229 டன் அமோனியம் நைட்ரேட் சென்றது: துறைமுகத்தில் இருந்து குடோன் வரை போலீஸ் பாதுகாப்பு

சென்னை: துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்து 7,40 டன் அமோனியம் நைட்ரேட்டில் 2வது கட்டமாக 400 டன் மட்டும் தற்போது ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அனைத்து நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த விசாரணையில் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து 740 டன் அமோனியம் நைட்ரேட் மணலி பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள சரக்குப் பெட்டகத்தில் இருப்பதும், சுமார் 5 ஐந்தாண்டுகளாக 37 கன்டைனர் பெட்டிகளில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மணலி சரக்குப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து நேரில் ஆய்வு நடத்தினர்.

பின்னர் நேற்று முன்தினம் முதற்கட்டமாக அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்டுள்ள சுமார் 181 டன் எடை கொண்ட 10 கன்டெய்னர் பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் ட்ரெய்லர் லாரிகளில் ஏற்றி மதியம் சுமார் 3.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று காலை 229 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 12 பெட்டிகள் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 400 டன் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அமோனியம் நைட்ரேட்டையும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைத்துவிடுவோம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories:

>