×

தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போதைய நிலவரம்: திமுக கூட்டணி இதுவரை 26 இடங்களில் வெற்றி; அதிமுக 7 இடங்களில் வெற்றி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை திமுக கூட்டணி இதுவரை 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் ஒரு அணியாகவும், அதிமுக தலைமையில் பாஜக, பாமக ஆகியவை மற்றொரு அணியாகவும், கமலஹாசன் தலைமையில் மநீம, சமக ஆகிய கட்சிகளும், டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்த்தின் தேமுதிக ஆகியவை ஒரு கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டனர். தமிழக தேர்தலில் 5 கூட்டணிகள் களம் கண்டன. மாநிலம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பாலகிருஷ்ணன், வைகோ, முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர். அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி, கிரண்குமார், உள்ளிட்டவர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல, நடிகர் கமல், டிடிவி தினகரன், சீமான் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 234 தொகுதியிலும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கியதாகவும், அமைச்சர்கள் ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை செலவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதையும் மீறி தமிழகத்தில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 70 சதவீத வாக்குகளை தாண்டியதால், அதிமுக தோல்வியை சந்திக்கும் என்று பரவலாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல, கருத்து கணிப்புகளும் வெளியாகின. அதில், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழக தேர்தலைத்தான் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருந்தன. தமிழகம்தான் எதற்கும் முன்னோடியாக திகழும். கடந்த மக்களவை தேர்தலிலும் நாடு முழுவதும் பாஜக அலை அடித்தபோதும், தமிழகத்தில் திமுக கூட்டணி மொத்தமாக வெற்றி பெற்றது. அதேபோலத்தான் தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அதிமுக வேட்பாளர்கள் பலர் பாஜக கொடியை பயன்படுத்தாமல் புறக்கணித்தனர். பாஜக எதிர்ப்பு தமிழகத்தில் அதிகமாக இருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், தபால் வாக்குகளைப் பொறுத்தவரை திமுகதான் அதிக இடங்களில் முன்னிலை வகித்தன. பின்னர் வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆரம்பம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கத் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்டணி மெஜாரிட்டியைப் பிடித்தது. தற்போதைய நிலவரப்படி திமுக 158 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும், மக்கள் நீத்து மய்யம் ஒரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதாவது; * விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் வெற்றி – அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 38,579 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி* ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி – திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியை தழுவினார்* திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து வெற்றி* எழும்பூர் தொகுதியில்  திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றார்* சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி* தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி * அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவி வெற்றி * பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி* கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜெகன்மூர்த்தி வெற்றி…

The post தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போதைய நிலவரம்: திமுக கூட்டணி இதுவரை 26 இடங்களில் வெற்றி; அதிமுக 7 இடங்களில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Assembly ,Dizhagam Alliance ,chennai ,tamil nadu ,dazhagam alliance ,Tamil ,Nadu ,Tizagam Alliance ,
× RELATED ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக...