×

திருஉத்திரகோசமங்கை கோயிலுக்கு பேவர் பிளாக் சாலை வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி: திருஉத்திரகோசமங்கை வராஹி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து கிடக்கிறது. புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கையில் பிரசதிப்பெற்ற மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில், மரகத நடராஜர் கோயில் உள்ளது. இதற்கு அருகில் சுயம்பு வராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வழக்கமான நாட்கள் மட்டுமன்றி விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

இங்கு வெளிமாவட்டம் மட்டுமன்றி வெளிநாடு, வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கடந்த மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் வழிபட தடை உள்ளது. இதனால் அர்ச்சகர்கள் மட்டும் வழக்கமான பூஜைகளை செய்து வருகின்றனர். மங்களநாதர் கோயில் சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்து வராஹிஅம்மன் கோயில் செல்ல இரண்டு சாலைகள் உள்ளது. அவை முற்றிலும் சேதமடைந்து மண்ணாக கிடக்கிறது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டால் கூட்டம் அதிகரிக்கும், வாகனங்களும் வந்து செல்லும் நிலை உள்ளது.

ஆனால் சாலை சேதமடைந்து கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத அவலம் உள்ளது. மழை பெய்தால் பக்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் நடந்து கூட செல்ல முடியாத அவலம் ஏற்படும். எனவே வராஹி அம்மன் கோயில் செல்லும் சாலையில் புதிதாக பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும் என கிராமமக்கள், பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,Paver Block Road ,Thiruuthirakosamangai Temple , Thiruuthirakosamangai Temple, Paver Block Road, Devotees
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...