×

திருக்ருக்காவூர் கிராமத்தில் இறால் குட்டைகளை தடை செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே திருகருகாவூர் கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இறால் குட்டைகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருகருகாவூர் கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல நீராக இருந்து வருவதால் காலம் காலமாக குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வந்தனர். இதனால் இக்கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக படிப்படியாக இறால் குட்டைகள் வெட்டப்பட்டு அவைகளில் உப்பு நீர் தேக்கி இறால் வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வந்தனர். சுமார் 80 ஏக்கர் விளை நிலங்கள் இறால் குட்டைகளாக மாறியதால் அதனை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியதால் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறிவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே திருக்கருகாவூர் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயி செல்லையா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர், பி.டி.ஓ ஜான்சன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களிடம் நேரில் சென்று கொடுத்த புகாரின் மனுவில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமாகவும் விவசாய நிலங்கள் பயனினின்றி போவதற்கும் காரணமாக இருந்து வரும் இறால் குட்டைகளை தடை செய்யவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி தாசில்தாருக்கும் இது குறித்து புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : village ,Thirukrukkavur , Thirukrukkavur, Shrimp Pudding, Ban
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...