×

சென்னையில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!!

சென்னை:  சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி சென்ற 3 மர்ம நபர்களை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம், பாளையம் பிள்ளை தெருவை  சேர்ந்தவர் சரவணன் என்கின்ற சதீஸ். இவர் கோபிகிஷ்ணா திரையரங்கம் அருகே ஆதவன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் சரவணனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். நிலைதடுமாறிய சரவணன், பின்னர் சுதாரித்து கொண்டு அவர்களை எதிர்த்து தாக்க முயற்சி செய்தார். மேலும் அருகில் இருந்த கடையில் வேலை பார்க்கும் ஆட்களும் மர்ம நபர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்டனர்.

 ஆனால் இளைஞர்கள் 3வரும் கத்தியை காண்பித்து தப்பித்து சென்றனர். தற்போது இந்த சிசிவிடி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அயனாவரம் போலீசார் சிசிடிவி உதவியுடன் தப்பி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : supermarket owner ,Chennai ,CCTV , Sickle cut for supermarket owner in Chennai: CCTV footage of the story .. !!!
× RELATED ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருக்கு அரிவாள் வெட்டு