சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக ஐகோர்ட் தடை ; இ.ஐ.ஏ அறிக்கை பிராந்திய மொழிகளில் ஏன் வெளியிடவில்லை?.. நீதிபதிகள் கேள்வி

பெங்களூரு: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே மார்ச் 23-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் உடனடியாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கர்நாடகா நீதிமன்ற நீதிபதிகள் இந்த வரைவு அறிக்கைக்கு தற்காலிக தடை விதித்தனர்.

ஏன்னெனில் இந்த வரைவு அறிக்கை தற்போது வரை இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது. பிற மொழிகளில் ஏன் இந்த அறிக்கையை மொழி பெயர்க்கவில்லை? என்று கர்நாடகா நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் மற்ற மொழிகளில் இதை மொழி பெயர்ப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் மற்ற மொழிகளில் இந்த வரைவு அறிக்கையை கர்நாடகாவில் அமல்படுத்துவதற்கு தடை விதிப்பதாக கர்நாடகா ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கை குறித்து மாநில அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டு வழக்கானது வரும் செப்.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>