×

தென்னிலையில் இருந்து நெரூர் வரை செல்லும் பாசன வாய்க்காலில் முட்புதர் மண்டி பாதிப்பு

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இருந்து நெரூர் வரை செல்லும் பாசன வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் இருந்து நெரூர் வரை பல்வேறு கிராமங்களின் வழியாக பாசன வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை மழையால் நிரம்பும் சமயங்களில் எல்லாம் இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் தண்ணீர் வரத்தின்மை காரணமாக பாசன வாய்க்கால் பகுதி முழுவதும் முட்புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே வரும் மழைக்காலத்திற்குள் இந்த பாசன வாய்க்காலை தூர்வாரி சுத்தமாக பராமரித்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



Tags : irrigation canal ,Nerur , irrigation, Tennilai ,Nerur, , knee joint
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்