×

வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்திற்கே கொரோனா பரவுமா? ஆய்வில் தகவல்

புதுடெல்லி: வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் மற்ற அனைவருக்கும் பரவும் ஆபத்து உள்ளதா என்பது குறித்து ஆய்வு அறிக்கை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் வைரசினால் பாதிக்கப்படுவதில்லை என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘வீட்டிற்குள்ளேயே கொரோனா பரவுதல்‘  என்ற தலைப்பில் உலகளவில் வெளியிடப்பட்ட 13 ஆவணங்களை மறுஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் அனைவரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கூற்று உண்மையானதில்லை என்று கூறப்படுகின்றது. ஆய்வு அறிக்கையில் “ஒரு  குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் கூட 80 முதல் 90% குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளனர். இதனால் நோய் தாக்குதலுக்கு ஆளாவது இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் திலீம் மவலங்கர் கூறுகையில், “ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து உறுப்பினர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சில குடும்பங்கள் மட்டுமே உள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தவர்களின் வீடுகள் கூட உள்ளன. ஆனால் இந்தவீட்டில் வேறு எந்த குடும்ப உறுப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேபோல் குடும்பத்தில் முதியவர்களிடம் இருந்து குழந்தைக்கு பரவுதல் குறைவாக உள்ளது. ஆனால் வயது வந்தவர்களிடம் இருந்து முதியவருக்கு பரவுதல் கூட 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே” என்றார். ஒரு  குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் கூட 80 முதல் 90 சதவீதம் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதில்லை.

Tags : someone ,home , Does the corona spread to someone in the home, to the family ?, study information
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...