×

மாஞ்சா நூலால் காவலர் படுகாயமடைந்த விவகாரம்: நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் ஆய்வாளர் பணியிடமாற்றம்!

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் தற்போது மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். மாடிகளில் நின்று கொண்டு இதுபோன்ற விஷம வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார்கள். இதனால் சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இருப்பினும் சென்னையில் மாஞ்சா விடுவது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது பட்டம் விடுவது குறைந்து வருகிறது. இந்நிலைணயில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பைக்கில் சென்ற போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் மாஞ்சா நூல் அறுத்ததில் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் வில்லிவாக்கம் ஆய்வாளர் ரஜீஸ்பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆய்வாளர் ரஜீஸ்பாபுவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். காவலர் ஜெயக்குமார் காயமடைந்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Policeman ,Manja ,Inactive Villivakkam Inspector ,Inactive Villivakkam , Manja thread, Guardian, Injury, Archery Analyst, Transfer
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...