×

டெல்லியில் நடந்த கோர விபத்தால் ஐஸ்கிரீம் விற்பனையாளர் உட்பட 4 பேர் படுகாயம்..! !திடுக்கிடும் சிசிடிவி பதிவுகள் வெளியீடு!!!

டெல்லி:  டெல்லியில் இளம்பெண் ஒருவர் BMW காரை சாலையோரம் இருந்த 4 பேர் மீது, மோதி சென்ற காட்சிகள் வெளியாகி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள லாஜ்பாட் நகர் அருகே உள்ள அமர் காலனியில் இந்த கோர விபத்தானது நடந்துள்ளது. BMW காரில் அதிவேகமாக வந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதில் சாலையோரம் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தவர் உட்பட 4 பேர் மீது காரை மோதியுள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த பெண் தப்பிச்செல்லும் காட்சிகளும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் சிசிடிவி பதிவுகளை கொண்டு விபத்தை ஏற்படுத்திய இளம்பெண் ரோஷ்ணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அந்த பெண்ணை ஜாமீனில் விடிவித்துள்ளனர். ஏனெனில் காரை ஓட்டிச்சென்றபோது ரோஷ்ணி ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தார். திடீரென அவர் அருகில் இருந்த நாய் ஐஸ்கிரீம் எடுக்க தாவியதால் கியர் மாறி விபத்து நிகழ்ந்ததாக போலீசில் ரோஷ்ணி அரோரா தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை பரிசோதித்ததில் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே விபத்தில் காயமடைந்த 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : road accident ,ice cream vendor ,Delhi. ,CCTV , Delhi, ice cream vendor, CCTV recordings
× RELATED திருமங்கலம் அருகே ராஜபாளையம் என்ற...