×

ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மணிப்பூர் உட்பட மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் நேற்று புதிதாக இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இது குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், “ ஜம்மு மற்றும் காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக இணைந்துள்ளது. இவற்றோடு சேர்த்தால் த ற்போது ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன,” என்றார்.

ஆந்திரா, பீகார், தாத்ரா மற்றும் நாகர் ஹவேளி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன.



Tags : states ,Manipur , The only ration card scheme, Manipur, was joined by 4 states
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...