கூடலூரில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் மயானத்துக்கு கொண்டு சென்ற அவலம்: சமூக வலைத்தளங்களில் வைரல்

கூடலூர்: கூடலூரில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, வயிற்றுப்போக்கால், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் மூதாட்டியை வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அன்று மாலை மூதாட்டி இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் கூடலூர் நகராட்சி சுகாதாரப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற சுகாதாரத்துறையினர் மூதாட்டி உடலை பேக்கிங் செய்து, மயானத்திற்கு எடுத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. அப்பகுதி மக்களும் உடலை உடனே எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.  இதனால், அவரது மகன் கூலித்தொழிலாளி ஒருவர் மூலமாக தள்ளுவண்டியில் மூதாட்டியின் உடலை வைத்து, மயானத்திற்கு கொண்டு சென்று எரியூட்டினர்.

Related Stories:

>