×

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; இந்தியாவில் நாச வேலைக்கு தீவிரவாதிகள் சதி: தூதரக பார்சலில் பிட் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது போல தீவிரவாத கும்பல்களின் பிட் நோட்டீஸ்கள், கை புத்தகங்களும் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று என்ஐஏவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவைகளில் தீவிரவாத செயல்பாடுகள், இந்தியாவில் நடத்த வேண்டிய நாசவேலை குறித்தும் தகவல் இடம் பெற்று இருக்கலாம்? என்று என்ஐஏ சந்தேகிக்கிறது. இதுகுறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கேஸ் டயரியில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத கும்பல்கள் குறித்து பல முக்கிய ரகசிய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய நபர்களில் ஒருவரான ரமீஸ் காவலில் உள்ளார். இவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். பெரும்பாலும் துபாயில் இருந்துதான் கேரளாவுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அந்த தங்கத்தை வாங்குபவர்கள் யார்? கேரளாவில் அதற்கான பணத்தை திரட்டுவது யார்? இதை ஹவாலா பணமாக மாற்றி துபாய்க்கு கொண்டு செல்வது யார்? கேரளாவுக்கு தங்கம் கடத்தும் கும்பலில் உள்ளவர்கள் யார்? என என்ஐஏ, ரமீ
ஸிடம் விசாரித்து வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் ரமீஸுக்கு நன்றாக தெரியும் என்று என்ஐஏ கருதுகிறது. சொப்னா, சந்தீப் நாயருக்கு திருவனந்தபுரம், ெகாச்சி உள்பட பல்வேறு இடங்களில் நண்பர்கள் அதிகமாக உள்ளனர்.

இவர்களில் பலர் தங்கம் கடத்தலுக்கு உதவி வந்துள்ளனர். கைதுக்கு பிறகும் சொப்னா, சந்தீப் நாயர் 2 பேரும் தங்களது செயல்பாடுகளை நிறுத்தவில்லை என்று என்ஐஏவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இவர்களில் சிலரை கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஐஏ விசாரித்துள்ளது. இதில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. சொப்னா கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த கணவர் ஜெய்சங்கர், 2 குழந்தைகள் நேற்று வரை கொச்சியில் என்ஐஏ கண்காணிப்பில்
இருந்தனர். நேற்று அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். தங்கம் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது என்று ஜெய்சங்கர் கூறி உள்ளார். அதை என்ஐஏ நம்பவில்லை. எனவே மீண்டும் அவரை விசாரிக்கலாம் என்று தெரிகிறது.

அதிகாரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு
இந்த வழக்கை முதலில் சுங்க இலாகா இணை ஆணையாளர் அனீஷ் பி.ராஜன் தலைமையிலான குழுவினர் விசாரித்தனர். இந்த குழுவினர் 16 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் அவர் திடீரென நாக்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தனது பேஸ்-புக்கில் முதல்வர் பினராயி விஜயனை புகழ்ந்து பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மாநில பா.ஜ. தலைவர் சுரேந்திரன், அவரை விசாரணை குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று பணிமாற்றத்துக்கான உத்தரவு அனீஷ் பி.ராஜனுக்கு வழங்கப்பட்டது. உடனே பொறுப்பை ஒப்படைக்கவும், 10ம் தேதிக்குள் நாக்பூரில் பணியில் சேர வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்றே தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார். ஆனால் அவருக்கு பதிலாக விசாரணை பொறுப்பில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. சொப்னா கும்பலை விசாரித்து வந்த சுங்க இலாகா உயரதிகாரி திடீர் மாற்றத்துக்கு அந்த துறைக்கு உள்ளேயே ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு ெதரிவித்து உள்ளனர். இது தொடர்பாக நேற்று கொச்சி சுங்க இலாகா ஆணையாளரிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Tags : Terrorists ,Kerala ,India , Kerala gold smuggling, India, sabotage, terrorists conspiracy
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...