×

தமிழகத்தில் தலைவர்கள், தமிழறிஞர்கள், சிலைக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னை: தமிழகத்தில் தலைவர்கள், தமிழறிஞர்கள், சிலைக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. ஊரடங்கு காலத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மரியாதை செலுத்தலாம். மரியாதை செலுத்தப்படும் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் விதித்துள்ளது. இந்நிலையில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து அமைச்சர்கள், நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் 5 பேருக்கு மிகாமல் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர்ட் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதியை பெற்று அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்க மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : scholars ,leaders ,government ,Tamil Nadu ,idols ,Tamil , Tamil Nadu, Leaders, Idol Respect, Government, Government of Tamil Nadu
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...