×

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு: சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்..!!

பீஜிங்: சீனாவில் கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கட்டுக்குள் வந்தது.  இதனையடுத்து, சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சின்ஜியாங் மாகாணத்திற்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சீனத் தலைநகர் பீஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக பீஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் இன்று  மட்டும் 112 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரமான உரும்யூ நகரில், 600க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 18,000-க்கும் அதிகமானோர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இந்த மாகாணத்தில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் மருந்துவச் சான்றிதழை அளித்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : China ,Corona ,Xinjiang , China, Corona, restrictions, severity, information
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன