×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...மாவட்ட நிர்வாகம் தகவல்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி,நெல்லை, தூத்துக்குடி  போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 9,097 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் 5,383 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3,111 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை மாவட்டத்தில் 110  பேர் உயிரிந்துள்ளனர்.

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.

Tags : Kanchipuram district ,District administration , Kanchipuram, Corona
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...