×

தடுப்பணைகளில் தண்ணீர் குறைகிறது: போதிய மழை இல்லாததால் விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் போதிய மழையில்லாததால், கிராமப்புற தடுப்பணைகளில் தண்ணீர் குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், சில நாட்களுக்கு பின்  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்தது. இந்த மாதம் துவக்கத்தில் இரண்டு வாரமாக  இரவு நேரத்தில் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால், அதன்பின் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதன் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை நோக்கி செல்கிறது.

இந்தநிலையில் வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள பல தடுப்பணைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.  மேலும், தண்ணீர் கசிவதை தவிர்க்க கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த முறை தென்மேற்கு பருவமழை வலுக்காததால், தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவானது. சில தடுப்பணைகளில் மட்டும்  குட்டைபோல் தண்ணீர் உள்ளது. விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் தடுப்பணை மூலமாக கிடைக்கபெறும் என விவசாயிகள் பலரும் எண்ணி இருந்தனர். ஆனால், தற்போது போதிய மழையின்றி பல தடுப்பணைகள் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


Tags : Dams, water, rain, farmers
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...