×

குமரியில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான 1000 ஹெக்டேர் நிலம் வனத்துறைக்கு கைமாறுகிறது

நாகர்கோவில்: குமரியில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான 1000 ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 1953 ல் 4,785 ஹெக்டேரில் அரசு ரப்பர் தோட்டம் தொடங்கப்பட்டது. 1984 ல் அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அரசு ரப்பர் தோட்டங்கள் என்பதை அரசு ரப்பர் கழகமாக மாற்றினார். அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார், குற்றியாறு, மருதம்பாறை, கல்லாறு கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசு ரப்பர் கழகத்தில் பால் வடிக்கும் பணியில் நிரந்தர பணியாளர்கள் 943 பேரும், 540 ஒப்பந்த ஊழியர்களும், 50  தொழிற்சாைல ஊழியர்களும் உள்ளனர்.  

அவர்களுக்கு 1.12.2016 முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற்காக நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போனது.
இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, அரசு ரப்பர் கழகம் மெல்ல, மெல்ல அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன. ஏற்கனவே கடந்த 3 வருடங்களுக்கு முன், சுமார் 1000 ஹெக்டேரை, அரசு ரப்பர் கழக நிர்வாகம் வனத்துறை வசம் ஒப்படைத்தது. வனத்துறை தற்போது அந்த பகுதியை தடை செய்துள்ளது.  இந்த நிலையில் தற்போது மேலும் 1000 ஹெக்ேடர் நிலத்தை அரசு ரப்பர் கழகம், வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

1000 ஹெக்டேர் நிலத்தில் சுமார் 2 லட்சம் ரப்பர் மரங்கள் நட முடியும். வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பார்கள். யாரும் உள்ளே செல்ல முடியாது. 1000 ஹெக்டேர் நிலத்தில், சுமார் 630 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசு ரப்பர் கழக நிர்வாகம் 1000 ஹெக்டேர் நிலத்ைத வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என கூறி உள்ளனர்.

தனியாருக்கு லாபம்..அரசுக்கு நஷ்டமா?
 சோனியா, ராகுல் பொது தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் குமரன் கூறியதாவது : அரசு ரப்பர் கழகத்தில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை என அழைத்து, அரசு ரப்பர் கழக பகுதியில் உள்ள சுமார் 1000 ெஹக்டேர் நிலத்தை வனத்துறையிடம் இணைக்க போவதாக நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார். அரசு ரப்பர் கழக நிர்வாகத்தில்  இருக்க கூடிய அதிகாரிகள் முறையாக செயல்படாமல் பல ஊழல் நடைபெற்றதால் அரசு ரப்பர் கழக நிர்வாகம் அழிந்து வருகிறது. அரசு ரப்பர் கழகம் சார்பில் கீரிப்பாறை, மயிலாறு, பெஞ்சாணி தொழிற்கூடங்கள் இருந்தன. ஆனால் நிர்வாக திறமையின்மையால் இவற்றில் மயிலாறு, பெருஞ்சாணி தொழிற்கூடங்கள் மூடப்பட்டன.

இதில் மயிலாறு தொழிற்கூடத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்ததை இந்த அரசு மூடி உள்ளது. தற்போது அரசு ரப்பர் கழகத்தையும் ஒட்டு மொத்தமாக மூடுவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
1000 ஹெக்டேரில் ரப்பர் மரங்கள் நட்டால், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். எனவே இந்த முடிவை கைவிட்டு முறைப்படி அரசு ரப்பர் கழகம் சார்பில் மரங்கள் நட்டு தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார்கள் லாபம் பார்க்கும் போது, அரசு ஏன்? இதில் நஷ்ட கணக்கு காட்டுகிறது என்பது தெரிய வில்லை என்றார்.

Tags : Forest Department ,land ,Kumari ,State Rubber Corporation , Kumari, Government Rubber Corporation, Land, Forest Department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...