×

விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்க : வனத்துறையினர் அடித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஆணை!!

மதுரை: தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த பாலம்மாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று  தாக்கியதில் இறந்துள்ளார். அவசரம் அவசரமாக இரவில் பிரேத பரிசோதனை நடந்தது தவறு, எனவே மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். கொலை வழக்காக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

மறு பிரேத பரிசோதனைக்கு அவசியமில்லை என அரசு தரப்பு


இந்த மனு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, ‘‘பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விவசாயி உடலில் 4 இடத்தில் காயம் இருப்பது தெரிகிறது’’ என்றார். அப்போது அரசு வக்கீல் நடராஜன், ‘‘மறு பிரேத பரிசோதனைக்கு அவசியமில்லை. கேரளாவில் 24 மணி நேரமும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என தெரிவித்தார். இதையடுத்து மனுவின் மீது இன்று உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே முத்துவின் உடலை பெற மறுத்து வாகைக்குளத்தில் 7வது நாளாக நேற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

முத்து உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதி ஆர்.பொங்கியப்பன் அமர்வில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உத்தரவை ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது. மனைவி பாலம்மாள் அவர்களின் கோரிக்கையை ஏற்று 3 பேர் அடங்கிய குழு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த குழுவில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார். குழுவில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார். மறு பிரேத பரிசோதனை செய்யும் குழுவின் பேராசிரியர் ஒருவரும் இடம்பெற வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Dam Muthu ,Judge ,Anikarai Muthu ,Forest Department ,death , Farmer, embankment, pearl, autopsy, forestry, beating, case, judge, order
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...