×

தேர்வுத்துறை இயக்குநர் பொறுப்பேற்பு

சென்னை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி சிகிச்சை முடிந்து நேற்று பணியில்சேர்ந்தார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக இருப்பவர் உஷாராணி. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு இருந்த போது, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு பதிலாக, தொடக்க கல்வி இயக்குநர் பழனிச்சாமி தேர்வுத்துறை இயக்குநராக பொறுப்பு ஏற்றார். இந்நிலையில், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் திரும்பினார். நேற்று அவர் தேர்வுத்துறை இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.


Tags : Director of Selection , Director of Examinations, Responsibility
× RELATED வேலூர் ஏஎஸ்பி பொறுப்பேற்பு