×

ஆண்டிபட்டி அருகே தண்டவாளம் அமைக்கும் பணி ஜரூர்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. மதுரை-போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ல் துவங்கியது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையே 43 கிமீ தூரத்திற்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உசிலம்பட்டி-தேனி இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக தேனி-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள கணவாய் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில், 2 கிமீ தூரத்திற்கு மலைகளை குடைந்து பாதை அமைக்கும் பணி கடந்தாண்டு துவங்கி, நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆண்டிபட்டி முதல் தேனி வரை சுமார் 20 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் தண்டவாளங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பிரத்யோகமாக ரயில் தண்டவாளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட லாரியில் பொருத்தப்பட்டுள்ள வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி தண்டவாளங்களை இணைக்கும் பணி நடக்கிறது. இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘தண்டவாளங்களை இணைக்கும் பணி ஒருவாரத்தில் முடிந்து விடும். அடுத்தக்கட்டமாக ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி துவங்கும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Andipatti , Andipatti, rail work, Zaroor
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி