×

இந்தியா மண்ணை ரஃபேல் விமானங்கள் தொடுவது நமது ராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்.. இது மோடியால் மட்டுமே சாத்தியமானது : ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி!!

ஹரியானா : பிரான்ஸில் இருந்து திங்கட்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தன. அம்பாலா விமானப்படை தளத்தில் 17வது விமானப் படை அணியில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படுகின்றன. 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு போர் விமானம் ரஃபேல் போர் விமானங்கள் ஆகும்.

இந்த நிலையில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து இறங்கிய நிகழ்வு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பறவைகள் (விமானங்கள்)அம்பாலாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளன. இந்தியா மண்ணை  ரஃபேல் போர் விமானங்கள் தொடுவது நமது இராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இவ்வகை போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் திறனில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், விமானம் மற்றும் அதன் ஆயுதங்களை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்த பிரெஞ்சு அரசு, டசால்ட் ஏவியேஷன் மற்றும் பிற பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரான்ஸ் அரசு உடன் பிரதமர் மோடி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதே ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியா வந்ததற்கு முக்கிய காரணமாகும். அவரது தைரியம் மற்றும் தீர்க்கமான தன்மைக்கு நான் மோடிக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த விமானம் மிகச் சிறந்த பறக்கும் செயல்திறனைக் கொண்டுள்ளது.அதன் ஆயுதங்கள், ரேடார் மற்றும் பிற சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் வார்ஃபேர் திறன்கள் உலகின் மிகச் சிறந்தவை. இந்தியாவில் ரஃபேல் விமானங்கள் வருகையால் நமது விமானப்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும். இதனால் நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறனை பெற்றுள்ளோம்.

இந்திய விமானப்படை செயல்பாட்டுத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதை ஆய்வு செய்த பின்னரே ரஃபேல் ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த கொள்முதல் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் இணைப்புப் பற்றி யாராவது கவலைப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும் என்றால், அவர் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புவோராக மட்டும் தான் இருக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : ground ,India ,Modi: Rajnath Singh , India, Raphael, planes, Modi, possible, Rajnath Singh, happy
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!