×

கொரோனா தொற்று காரணமாக ரயில்வே துறை ரூ.35,000 கோடி அளவிற்கு இழப்பை சந்திக்கும்: வாரியத் தலைவர் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரயில்வே துறை ரூ.35,000 கோடி அளவிற்கு இழப்பை சந்திக்கும் என அதன் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக ரயில்வே துறை ரூ.35,000 கோடி அளவிற்கு இழப்பை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி. கே. யாதவ், கடந்த ஆண்டு ரயில்வேக்கு கிடைத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்துடன் ஒப்பிடும்போது, தற்போது பயணிகள் பிரிவு வருவாயில் 10 முதல் 15 விழுக்காடு மட்டுமே வருமானம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 30 ஆயிரம் கோடி முதல் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் இழப்புகளை சரக்கு ரயில்கள் மூலம் ஈடுகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆண்டு சரக்கு ஏற்றுதலை 50 சதவீதம் அதிகரிப்பதே இதன் நோக்கம் என்றும் ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கொரோனா தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு, அதிக அளவிலான சரக்குப் போக்குவரத்தை ரயில்வே கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 27 ஜூலை 2020 அன்று இந்திய ரயில்வே மொத்தம் 3.13 மெட்ரிக் டன்கள் அளவிற்கு சரக்குப் போக்குவரத்தை கையாண்டுள்ளது. இது சென்ற ஆண்டு இதே நாளின் சரக்குப் போக்குவரத்தைக் காட்டிலும் அதிகமாகும். 27 ஜூலை 2020 அன்று ரயில்வேயில் ஏற்றிச் செல்லப்பட்ட மொத்த சரக்குப் போக்குவரத்து 3.13 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு இதே நாளின் அளவைவிட அதிகமாகும்.27 ஜூலை 2020 அன்று மொத்தம் 1039 ரேக்குகள் இந்திய ரயில்வேயின் சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டன. இதில் எழுபத்தாறு ரேக்குகள் உணவு தானியங்கள்; உரம் 67 ; எஃகு 49,சிமெண்ட் 113, இரும்புத்தாது 113;நிலக்கரி 363, என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Outbreak ,Board Chairman , Corona, Railway Department, Loss, Board Chairman
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...