×

பொள்ளாச்சியில் ஆம்புலன்ஸ் வர தாமதம் கொரோனா நோயாளிகள் 3 பேர் நடந்தே மருத்துவமனை சென்றனர்: போலீசில் புகார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர், பொறியாளர் உள்பட 12 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 3 ஊழியர்கள் வீட்டில் தனிமையில் இருந்தனர். அவர்கள் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்சிற்காக வெங்கடேசா காலனியில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் நேற்று காலை காத்திருந்தனர்.

ஆனால், 108 ஆம்புலன்ஸ் வர 1 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டுக்கு சென்றனர். அந்த 3 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என தெரியாமல் அவர்களுடன் நடந்து வந்த சிலர்அதிர்ச்சியில் உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியேறி, நோய் பரப்பும் நோக்கத்தில் பொதுவெளியில் நடமாடியதாக போலீசில் சுகாதாரத்துறை புகார் அளித்துள்ளது.


Tags : Corona ,Pollachi 3 ,hospital , Pollachi, Ambulance, Delay, Corona Patients, 3, Walking Hospital, Police Report
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...