×

உத்தராகண்ட்டில் தொடரும் கனமழை!: கோசி நதியில் பாயும் வெள்ளத்தால் பாலம் இடிந்தது..பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு..!!

டேராடூன்: அசாம், பீகாரை தொடர்ந்து தற்போது உத்தராகண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. உத்தராகண்ட் வழியாக பாயும் கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதிக்கு அருகில் உள்ள தங்கபாணி மற்றும் பித்ராகார் என்ற கிராமங்களுக்கு அருகே உள்ள பாலம் ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். மேலும், கனமழை காரணமாக மாநிலத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது உத்தராகண்ட்டில் கனமழை பெய்து வருவது கடந்த 2013 - 2019ல் அங்கு ஏற்பட்ட வெள்ள பேரழிவை நினைவு கூறுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அங்கு பேரிடம் மேலாண்மை பாதுகாப்பு மையம் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பீகாரில் பெய்து வரும் கனமழையால் பல லட்சம் பேர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த 11 மாவட்டங்களில் 25 லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதேநேரம் 2 மாதங்களாக அசாமில் தொம்சம் செய்து வந்த கனமழை சற்று ஓயத்தொடங்கியுள்ளது. ஆங்காங்கே வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. அசாமில் உள்ள பாதிப்பால் 103 பேர் இறந்துவிட்டனர். இவர்களில் 26 பேர் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களாவர். டெல்லியிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழையால் பல லட்சம் பேர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த 11 மாவட்டங்களில் 25 லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதேநேரம் 2 மாதங்களாக அசாமில் தொம்சம் செய்து வந்த கனமழை சற்று ஓயத்தொடங்கியுள்ளது. அங்கங்கே வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. அசாமில் உள்ள பாதிப்பால் 103 பேர் இறந்துவிட்டனர். இவர்களில் 26 பேர் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களாவர். டெல்லியிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Uttarakhand ,villages ,Kosi ,region , Bihar, Flood situation, Kosi region,,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்