×

அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் கொரோனா மருத்துவ முகாமை புறக்கணித்த பொதுமக்கள்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் கொரோனா மருத்துவ முகாம்களில், பொதுமக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அச்சிறுப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், அச்சிறுப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தினமும் பல இடங்களில் பரிசோதனை முகாம்கள் இலவசமாக நடத்துகின்றனர். தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ₹5 ஆயிரம் செலவாகிறது. இதனால் பொதுமக்கள், பண பிரச்னையை காரணம் காட்டி பரிசோதனை செய்யாமல் இருக்க கூடாது என இந்த முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், பெரும்பாக்கம், மொறப்பக்கம் ஆகிய கிராமங்களில் நேற்று இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. ஆனால், பல இடங்களில் பொதுமக்கள் பரிசோதனைக்கு வராமல்,

புறக்கணித்தனர். குறிப்பாக அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் பகுதியில் நடந்த முகாமுக்கு செல்ல அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிலர் வீடுகளை பூட்டி கொண்டு, யாரும் இல்லாதது போல் இருந்தனர். இதனால், அங்கு சென்ற மருத்துவ குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோன்று, பெரும்பாக்கம் மருத்துவ முகாமில் ஒரு சிலர் மட்டுமே பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags : areas ,public ,Achchirapalli ,Corona Medical Camp , Scarecrow area, corona, medical camp, neglected public
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...