அமெரிக்கா, வியட்நாம், சவுதியில் தவித்த 355பேர் சென்னை வந்தனர்

சென்னை: கொரோனா ஊரடங்கால் சவுதி அரேபியா ஜெட்டாவில் சிக்கிய 215 பேர், சிறப்பு தனி விமானத்தில் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். இவர்களை சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனமே தங்கள் சொந்த செலவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சிறப்பு அனுமதி பெற்று அழைத்து வந்துள்ளது. இவர்கள் பரிசோதனைக்காக தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் இருந்து டெல்லி, ஐதராபாத் வழியாக சிறப்பு மீட்பு விமானம் 72 பேருடன் சென்னை வந்தது. இவர்களில் 12 பேர் இலவச தங்குமிடத்துக்கும், 51 பேர் ஓட்டலிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 68 பேர் நேற்று முன்தினம் சிறப்பு மீட்பு விமானத்தில் சென்னை வந்தனர்.

Related Stories: