×

ரம்மி சர்கிள், பப்ஜி, ஐபிஎல் போன்ற ஆன்லைன் கேம்களில் பணம் வைத்து விளையாடி தோல்வி : விரக்தியில் சென்னை மாணவன் தற்கொலை!!

சென்னை : சென்னையில் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.பி சத்திரம் சேர்ந்த நிதிஷ்குமார் என்ற 20 வயதான இளைஞன் சென்னை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து கொண்டு அமைந்தகரையில் பச்சை குத்தும் கம்பனியில் வேலை செய்து கொண்டு வந்தார். இவருக்கு பப்ஜி கேம் போன்று ஆன்லைனில் கேம் விளையாடுவது அதிக விருப்பமாகும்.

இந்நிலையில் நேற்று இரவு நிதிஷ்குமார் அமைந்தகரையில் உள்ள கம்பனிக்கு வேலைக்கு வந்துள்ளார். அதன் பிறகு பப்ஜி கேம் விளையாடி கொண்டிருக்கும் போது அந்த கேம்மில் தோற்றதாக மனம் உடைந்த நிதிஷ்குமார் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். நிதிஷ் குமார் வீடு திரும்ப வில்லை என்பதால் அவரது தம்பி சம்பவ இடத்தில் வந்து பார்க்கும் போது நிதிஷ்குமார் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறினார். பின்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நித்திஸ் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், அவரது தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார். அதில் தான் ஆன்லைன் கேம்கள் விளையாண்டதாகவும், தன் சேமிப்பு பணத்தை அனைத்தையும் இழந்து விட்டதாகவும் கூறியுள்ளார். ரம்மி சர்கிள், பப்ஜி, ஐபிஎல் போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடி தோற்றதாகவும் நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்ற வெறியில் வேலை பார்த்த கடையில் உள்ள பணத்தை வைத்து கேஸ்ட்ரோ க்ளப் என்ற ஆன்லைனில் விளையாடியுள்ளார்.அதிலும் தோற்ற காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தான் தற்கொலை செய்து கொள்வது தவறு எனவும், தனது பெற்றோர்கள், நண்பர்கள் காதலி ஆகியோர் எல்லோருக்கும் கடிதத்தில் மன்னிப்பு கேட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags : student ,Chennai ,suicide ,Rummy Circle ,IPL ,Babji , Rummy Circle, Babji, IPL, Online, Game, Money, Failure, Frustration, Chennai, Student, Suicide
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...